கூகுள் நிறுவனமானது தொழில்நுட்ப உலகில் பல புதிய சரித்திரங்களை படைத்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்படுவதை உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்தும் வசதியை அறிமுகம் செய்வதில் முனைப்புக்காட்டி வருகின்றது.
இதற்காக உலகெங்கிலும் உள்ள அன்ரோயிட் சாதனங்களை பயன்படுத்தி அவற்றின் ஊடாக நிலநடுக்கங்கள் தொடர்பான தகவல்களை பெறவுள்ளது.
இதன் மூலம் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ளவர்களை எச்சரிக்க முடிவதுடன், அது தொடர்பான தகவல்களை உடனடியாகவே உலகில் எங்கிருந்தாலும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
கைப்பேசிகளில் காணப்படும் சில உணரிகளைப் பயன்படுத்தியே நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் பெறப்படவுள்ளன.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காக கூகுள் நிறுவனமானது United States Geological Survey (USGS) மற்றும் California Governor’s Office of Emergency Services (Cal OES)என்பனவற்றுடன் இணைந்து பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.