அப்பா-மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரைம் த்ரில்லர் வெளியான முதல் வாரத்திலேயே மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது.
நடிகை தமன்னா, பசுபதி, ஜி.எம்.குமார், அருள் தாஸ், மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்டோரின் நடிப்பில் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்து வழங்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த வாரம் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சீரிஸ் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. அப்பா-மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரைம் த்ரில்லர் வெளியான முதல் வாரத்திலேயே மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறது.
இந்த ரிசல்ட் குறித்துத் தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கும் தமன்னா, “ரசிகர்கள்கிட்ட இருந்து கிடைக்கிற பாராட்டும் அன்பும் மிகுந்த ஊக்கம் தருது. வெப் சீரிஸ்கள் நல்ல கண்டெட்டுடன் தரப்படுகிற போது ரசிகர்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்கிறதுக்கு இந்த வெற்றி ஒரு சாட்சி’’ என்கிறார்.
“‘நவம்பர் ஸ்டோரி’ எனக்கு ஒரு கனவுப் படைப்பு. நாம உருவாக்கியதைப் பலரும் ரசிக்கிறாங்கனு நினைக்கிறப்ப கிடைக்கிற உணர்வை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியலை. மிகச்சிறந்த நடிகர்கள், அர்ப்பணிப்புடன் வேலை செய்த யூனிட், என்னை முழுசா நம்பிய தயாரிப்பாளர்கள், இவங்க எல்லாராலும்தான் இந்த வெற்றி சாத்தியமாச்சு!” என்கிறார் சீரிஸ் இயக்குநர் இந்திரா சுப்பிரமணியன்.